“உயிரிழந்த கைதிக்கு வலிப்பு நோயே இல்லை“ : விருத்தாச்சலம் சிறையில் கைதி மர்ம மரணம் குறித்து மனைவி கண்ணீர்!!

7 November 2020, 7:48 pm
Prisoner Dead- Updatenews360
Quick Share

கடலூர் : விருத்தாச்சலம் கிளைச் சிறையில் கைதி மர்ம மரணம் குறித்து 8 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என மனித உரிமை ஆணைய புலன் விசிரணைப் பிரிவு டிஜிபிக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 30ம் தேதி கடலூர் மாவட்டம் நெய்வேலி நகரிய பகுதியில் சாலையில் நடந்து சென்ற இளம்பெண்ணிடம் இருந்து தங்கச்சங்கிலியை மர்மநபர் ஒருவர் பறித்து சென்றார்.

இதையடுத்து புகாரின் பேரில் விசாரணையில் ஈடுபட்ட போலீசார் நெய்வேலி அருகே வடக்குத்து சக்தி நகரை சேர்ந்த செல்வம் என்கிற செல்வமுருகனை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ஒரு சவரன் நகை மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து செல்வமுருகனை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விருத்தாச்சலம் கிளை சிறையில் அடைத்தனர். கடந்த 5ம் தேதி செல்வமுருகனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனிடையே செல்வமுருகனை பற்றி எந்த தகவலும் அறியாக குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடியுள்ளனர். அவரைக் கைது செய்தது குறித்து அவரது குடும்பத்தாருக்கு எந்த தகவலும் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது.

கணவர் குறித்து காவல்நிலையத்தில் விசாரித்த போதும் எந்த தகவலும் தெரியவில்லை. இந்த நிலையில் நல்ல உடல்நிலையில் இருந்த கணவர் திடீர் மரணம் அடைந்ததாகவும், வலிப்பு நோயால் இறந்ததாக போலீசார் கூறியுள்ளதாக செல்வமுருகன் மனைவி பிரேமா கூறியுள்ளார்.

மேலும் தனது கணவருக்கு வலிப்பு நோய் இருந்தது இல்லை, அவரது உடலை வாங்க தன்னை வற்புறுத்துவதாகவும். கணவர் மரணத்தில் மர்மம் உள்ளதாகவும் நெய்வேலி காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் அடித்து துன்புறுத்தியதால்தான் அவர் மரணம் அடைந்துவிட்டதாக பிரேமா குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தமிழக அரசு, தேசிய மற்றும் மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு கடலூர் மத்திய சிறைக் கண்காணிப்பாளர் கடிதம் அனுப்பியிருந்தார். இதன் அடிப்படையில், செல்வமுருகன் மரணம் குறித்து 8 வாரங்களில் அறிக்கை அனுப்ப வேண்டும் என மனித உரிமை ஆணையத்தில் உள்ள புலன் விசாரணை பிரிவு டிஜிபிக்கு, மாநில மனித உரிமை ஆணையத்தின் பொறுப்பு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மகனை கைது செய்து அடித்து துன்புறுத்தியதால் இருவருதும் உயிரிழந்த விவகாரம் அடங்குவதற்கு மற்றொரு சம்பவம் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது நிலை குலையச் செய்துள்ளது.

Views: - 28

0

0