ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு கொலை மிரட்டல்… துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு.. பதற்றமன சூழல்!

Author: Udayachandran RadhaKrishnan
4 August 2024, 1:23 pm
armstron
Quick Share

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் ஐந்தாம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை சம்பவம் தமிழகத்தில் பேசும் பொருளாக மாறி வந்த நிலையில் , ஆம்ஸ்டாங்கின் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் கடிதம் ஒன்று அவரது அலுவலகத்திற்கு வந்ததுள்ளது.

அதில் ஆம்ஸ்ட்ராங்கின் மகளை கடத்தி விடுவதுடன் அவரது குடும்பத்தினர் அனைவரையும் குண்டு வீசி கொலை செய்து விடுவதாக கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது.

இந்த கடிதம் குறித்து செம்பியம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் படூர் பகுதியை சேர்ந்த சதீஷ் என்ற வாலிபரை பிடித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

அயனாவரத்தில் உள்ள வீட்டில் பத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

மறைந்த ஆம்ஸ்ட்ராகின் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

  • Instagram ஓட்டலில் அறை எடுத்து 20 நாட்களாக சிறுமியை சீரழித்த இளைஞர் : இன்ஸ்டாகிராம் நண்பனால் வந்த வினை!!
  • Views: - 258

    0

    0