கடன் தொல்லை: விரக்தியில் பெண் குளத்தில் குதித்து தற்கொலை!!
25 September 2020, 8:39 pmதிருவாரூர் : கடன் தொல்லையால் பெண் கோவில் குளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து
காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவாரூர் தேவர்கண்டநல்லூர் சேர்ந்தவர் ராஜகோபால். இவர் அரசு மதுபான கிடங்கில் லோடுமேன் ஆக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கமலவேணி (வயது 36). இவர் மகளிர் சுய உதவிக்குழு மற்றும் வீட்டிற்கு செலவிற்கு கடன் வாங்கியுள்ளார்.
இந்நிலையில் கடன் கொடுத்தவர் பணம் திருப்பித் தர கட்டாயப் படுத்தி உள்ளார். பணத்தை திருப்பித்தர வழியில்லாத நிலையில் கமலவேணி திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலுக்கு எதிரே உள்ள கமலாலயக் குளத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
அவ்வழியே சென்ற பொதுமக்கள் பார்த்து தகவல் அளித்ததன் பேரில் திருவாரூர் நகர காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடன் கொடுத்தவர் யார், எதற்காக தற்கொலை செய்துகொண்டார் எனவும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்