ஆன்லைன் ரம்மியால் கழுத்தை நெறித்த கடன் : குடும்பத்தை தவிக்க விட்ட மருத்துவமனை ஊழியர்.. தொடரும் சோகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 March 2023, 1:38 pm
Online Rummy Suicide - Updatenews360
Quick Share

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை குடியிருப்பு 8வது தெருவை சேர்ந்தவர் ரவிசங்கர் (வயது 42). இவர் துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனையில் அட்டெண்டராக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் ரவிசங்கர் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகி உள்ளார். அப்படி ரவிசங்கர் தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாடியதில் கடன் அளவுக்கு அதிகமானதால் இரண்டு நாட்களாக வேலைக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இன்று வழக்கம் போல் காலை ரவிசங்கர் மனைவி ராஜலட்சுமி ரவிசங்கரை எழுப்பிய பொழுது அவர் எழுந்திருக்கவில்லை அதனை தொடர்ந்து உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ரவி சங்கரை மீட்டு துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு ரவிசங்கரை பரிசோதித்த மருத்துவர்கள் ரவிசங்கர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். சம்பவம் குறித்து ராஜ லட்சுமி நவல்பட்டு காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

அதன் அடிப்படையில் நவல்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரவிசங்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இறந்து போன ரவிசங்கருக்கு சாய்வர்சன் என்ற ஆறு வயது மகன் உள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 147

0

0