கோயம்பேடு சந்தையை திறக்க ஒரு வார காலம் கெடு : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!
10 September 2020, 4:47 pmசென்னை : கோயம்போடு மொத்த கனி விற்பனை அங்காடியை திறப்பது குறித்து ஒரு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோயம்பேடு சந்தைக்கு வந்து சென்ற பலருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் கோயம்பேடு சந்தையை மூட உத்தரவிடப்பட்டது. இதையடுத்து தற்காலிகமாக திருமழிசையில் சந்தை மாற்றம் செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது.
கொரோனா தொற்று படிப்படியாக தமிழகத்தில் குறைந்து வருகிறது. இதனால் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளதால் கோயம்பேடு சந்தையை திறக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கோயம்போடு சந்தை திறக்கப்படாததால் 700க்கும் மேற்பட்ட வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் கோயம்பேடு சந்தையை திறக்க வேண்டுட்ம என வியாபாரிகள் சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், கோயம்போடு மொத்த கனி விற்பனை அங்காடியை திறப்பது குறித்து ஒரு வாரத்தில் முடிவு எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
0
0