கோவை வெள்ளலூரில் நடந்த கல்லூரி மாணவர் கொலையில் காதலியை தட்டி பறித்த ஆத்திரத்தில் போதை ஊசி செலுத்தி கொன்றதாக கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளனர்.
கோவை, அருகே வெள்ளலூர் புதிய பேருந்து நிலையத்திற்காக கட்டப்பட்ட கட்டிடத்திற்கு முன்பு உள்ள காலி இடத்தில் கடந்த 11 தேதி வாலிபர் ஒருவர் கை, கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை தொடங்கினர். மேலும் 4 தனி படைகள் அமைக்கப்பட்டு இறந்தவர் யார் ? கொலை செய்யப்பட்டாரா ? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.
இதில் இறந்தவர் மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சூர்யா என்பதும் கொலை செய்யப்பட்டு இருப்பதும் தெரிய வந்தது.இதை அடுத்து அவரது செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில், மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்தவரும் கோவையில் வசித்து வருபவருமான கார்த்திக் மற்றும் அவரது நண்பரும் கூட்டாளிகளுமான 4 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் காதல் விவகாரத்தில் சூர்யாவை கார்த்திக் அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இதை அடுத்து கூட்டாளிகளான போத்தனூரைச் சேர்ந்த நரேன் கார்த்திக், கிணத்துக்கடவை சேர்ந்த மாதேஷ், போத்தனூரைச் சேர்ந்த முகமது ரஃபீக் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.
கைதானவர்கள் அளித்த வாக்குமூலம் குறித்து காவல் துறையினர் கூறும் போது : மதுரை மாவட்டம் அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் கோவையைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. ஆரம்பத்தில் கார்த்திக் உடன் பழகிய அந்தப் பெண் திடீரென அவருடன் பழகுவதை நிறுத்தி விட்டார்.
பின்னர் அந்த பெண் மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவரான சூர்யாவை காதலிக்க தொடங்கியதாக தெரிகிறது. இருவரும் அடிக்கடி செல்போன் மூலம் வீடியோ காலில் பேசி காதலை வளர்த்து வந்தனர்.
இது குறித்து அறிந்த கார்த்திக் ஆத்திரம் அடைந்தார். தனது காதலியை தட்டிப் பறித்து சூர்யா மீது கடும் கோபத்தில் இருந்ததாக தெரிகிறது.இந்நிலையில் தான் கார்த்திக் தனது கூட்டாளிகளான நரேன் கார்த்திக், மாதேஷ், முகமது ரபிக் ஆகியோருடன் சேர்ந்து சூர்யாவை தீர்த்து கட்ட முடிவு செய்தார். இதன்படி சூர்யாவை நைசாக பேசி கோவைக்கு வர வழைத்தனர்.
பின்னர் அவர்கள் அனைவரும் ஆறுமுக கவுண்டனூரில் உள்ள மாதேஷ் அழைக்கிச் சென்று, ஒன்றாக மது அருந்தியதாக தெரிகிறது. அப்பொழுது கார்த்திக் தனது கூட்டாளிகளுடன், சேர்ந்து சூர்யாவுக்கு போதை ஊசி செலுத்தினார். இதனால் அவர் மயக்கம் அடைந்ததும் கை, கால்களை கட்டி முகத்தில் தலையணையை வைத்து கொலை செய்தது தெரியவந்து உள்ளது.
பின்னர் அவர்கள் சூர்யாவின் உடலை வெள்ளலூர் குப்பை கிடங்கில் வீசி வீசி முடிவு செய்து உள்ளனர். அங்கு ஆட்கள் நடமாட்டம் இருந்ததால் வெள்ளலூர் பேருந்து நிலையத்திற்கு கட்டப்பட்ட கட்டிடத்திற்கு முன்பு உள்ள காலி இடத்தில் வீசி விட்டு தப்பிச் சென்று உள்ளனர்.
அதன் பின்னர் தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் 4 பேரும் சிக்கியதாக காவல் துறையினர் தெரிவித்தனர். கைதான 4 பேரு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கலவையான விமர்சனம் சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் வெளியான “வீர தீர சூரன் பார்ட் 2” திரைப்படம்…
தள்ளிப்போன வெளியீட்டு விழா இந்தியா-பாகிஸ்தான் எல்லைகளில் போர் மேகம் சூழ்ந்திருந்த நிலையில் “தக் லைஃப்” திரைப்படத்தின் டிரெயிலர் மற்றும் ஆடியோ…
அரசியலில் விஜய் விஜய் தனது கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம்…
பாமக சித்திர முழுநிலவு மாநாட்டில பேசிய அன்புமணி , இளைஞர்களை அத்துமீறு என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன். படித்து வேலைக்கு…
வாழ்க்கையில் பல துனபங்களை சந்தித்து மாடலிங் துறையில் ஈடுபட்டு படிப்படியாக முன்னேறியதாக பிக் பாஸ் பிரபலம் தனது கண்ணீர் கதை…
கோயில்களின் நகரம் என சிறப்பு பெற்ற காஞ்சியில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் திருக்கோயிலில்…
This website uses cookies.