திருப்பூரில் களைகட்டிய தீபாவளி ஷாப்பிங் : மக்கள் கூட்டத்தால் போக்குவரத்து நெரிசல்!!

13 November 2020, 4:34 pm
Tirupur Crowd - Updatenews360
Quick Share

திருப்பூர் : தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், திருப்பூர் புதுமார்கெட் வீதியில் உள்ள துணி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, திருப்பூர் புதுமார்க்கெட் வீதியில் உள்ள துணிக்கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக, திருப்பூர் குமரன் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பண்டிகைக்கு தேவையான பொருட்கள் வாங்க பொதுமக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, ஜவுளி மற்றும் நகைக்கடைகள் அதிகமுள்ள திருப்பூர் புதுமார்கெட் வீதியில் பொதுமக்கள் கூட்டமானது அதிகளவில் உள்ளது.

இதனால் குமரன் சாலை, காமராஜர் சாலை பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து நெரிசலை குறைக்கும் அதிகளவிலான போலீசார் பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். மேலும் குற்றசம்பவங்கள் ஏதும் நிகழாத வண்ணம் தடுக்கும் வகையில் சிசிடிவி கேமராக்கள், கண்காணிப்பு கோபுரங்கள் மூலமாகவும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

Views: - 24

0

0