செங்கோட்டையில் தேசியக்கொடியை அகற்றியவர்களை அமித்ஷா சுட்டுத் தள்ளியிருக்கனும் : அர்ஜுன் சம்பத் ஆவேசப் பேச்சு…!!!
29 January 2021, 11:42 amடெல்லியில் உள்ள செங்கோட்டையில் தேசியக்கொடியை அகற்றியவர்களை சுட்டுத்தள்ளியிருக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் ஆவேசமாக பேசியுள்ளார்.
மதுரையில் மன்னர் திருமலை நாயக்கரின் 438வது பிறந்த நாள் விழாவையொட்டி அவரது சிலைக்கு அர்ஜுன் சம்பத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- தமிழகத்தில் இஸ்லாமிய படையெடுப்பு காலங்களில் எடுக்கப்பட்ட கோவில்களை மீட்டெடுத்தவர் திருமலை நாயக்கர் வம்சத்தை சேர்ந்தவர்கள்தான். தமிழை வளர்த்து அதனை காத்தவர் திருமலை நாயக்கர். ஆனால், நாம் தமிழர் கட்சியினர் திருமலை நாயக்கர் ஒரு தமிழர் இல்லை என பொய் பிரச்சாரம் செய்து வருகிறார். சீமானை விட தமிழை அதிகம் வளர்த்தவர் நாயக்கர்.
பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகளின் தூண்டுதலின் பேரில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தப்பட்டுள்ளது. செங்கோட்டையில் தேசிய கொடியை அகற்றிவிட்டு பிரிவினைவாத கொடியை ஏற்றியுள்ளனர். இந்த கொடூர செயலை செய்தவர்களை சுட்டுத்தள்ள அமித்ஷா உத்தவிட்டிருக்க வேண்டும். அமித்ஷாவும், பிரதமர் மோடியும் இரும்புக்கரம் கொண்டு கலவரத்தை ஏற்படுத்தியவர்களை ஒடுக்க வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் வேளாண் சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற்றுவிடக் கூடாது.
மதுரைக்கு ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ராகுல் காந்தி வெளிநாட்டில் இருந்து நேரடியாக வந்துள்ளார். அரசியல் செய்வதற்காகவே, தனிமைப்படுத்திக் கொள்ளாமல் இங்கு வந்துள்ளார். ராகுல் காந்தி தமிழகத்திற்கு மீண்டும் வந்தால், கருப்பு கொடி காட்டுவோம். ரஜினி அரசியலில் ஒதுங்கியிருந்தாலும், ஆன்மீகக் கொள்கையில் இருந்து விலகவில்லை. ரஜினி ரசிகர்கள் விலை கொடுத்து வாங்க திமுக முயற்சிக்கிறது, எனக் கூறினார்.
0
0