சென்னையில் ஒருவருக்கு உருமாறிய டெல்டா ப்ளஸ் கொரோனா உறுதி : மருத்துவத்துறை செயலாளர் தகவல்!

Author: Udayachandran RadhaKrishnan
23 June 2021, 5:38 pm
Delta Plus - Updatenews360
Quick Share

சென்னை : சென்னையில் ஒருவருக்கு டெல்டா ப்ளஸ் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதிலும் கொரோனா இரண்டாம் அலை மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதிகளவிலான உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டாம் அலையில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து அதிக வீரியமுள்ளதாக மாறியுள்ளது.

இந்த நிலையில், உருமாற்றம் அடைந்த கொரோனா வைரசுக்கு டெல்டா என உலக சுகாதார நிறுவனத்தால் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த டெல்டா வகை கொரோனாவால் அதிகளவிலான பாதிப்புகள் ஏற்படும் என உலக சுகாதார நிறுவனமே எச்சரித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் முதன் முறையாக ஒருவருக்கு டெல்டா ப்ளஸ் வகை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தற்பொழுது மருத்துவத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Views: - 247

0

0