கழிவுநீர் ஓடை அமைக்க கோரிய மக்கள்… கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்: கழிவுநீரில் குளித்து நூதன போராட்டம்..!!
Author: Aarthi Sivakumar7 November 2021, 5:05 pm
கன்னியாகுமரி: நித்திரவிளை அருகே மேற்கு கடற்கரை சாலையில் கழிவு நீர் ஓடை அமைக்க கேட்டு கழிவு நீரில் குளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்ட நித்திரவிளை அருகே மேற்கு கடற்கரை சாலையில் கடந்த 6 மாத காலமாக மழை நீர் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் சாலையில் தேங்கி உள்ளன. இதனால் பெருங்குளம் செல்லும் வழியாக கல்லூரி, பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.
இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள 500 க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்தும் மக்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கழிவு நீர் ஓடை அமைக்க நீண்டகால கோரிக்கை விடுத்த போதிலும் மக்கள் பிரதிநிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளாத நிலையில் அரசின் கவனத்தை ஈர்க்க நூதன போராட்டம் நடத்தப்பட்டது.
அதன்படி, தேங்கிய கழிவு நீரில் அதே பகுதியை சேர்ந்த ரசல் தாஸ் என்பவர் சோப்பு போட்டு குளித்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர். இதை தொடர்ந்து உடனே கழிவு நீர் ஓடை அமைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
0
0