பிரபல தனியார் பள்ளியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட சுற்றுச்சுவர் இடிப்பு : நீதிமன்ற உத்தரவுப்படி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
4 August 2022, 5:28 pm

திருவள்ளூர் : பொன்னேரி அருகே நீதிமன்ற உத்தரவுப்படி வேலம்மாள் தனியார் இன்டர்நேஷனல் பள்ளியில் ஆக்கிரமித்து கட்டியிருந்த சுற்றுச்சுவர் இடித்து அகற்றப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள ஆண்டார்குப்பம் பஞ்செட்டி கிராம எல்லையில் அமைந்த வேலம்மாள் தனியார் இன்டர்நேஷனல் பள்ளி வளாகத்திற்குள் நீர் வரத்து கால்வாய் பகுதி 65 சென்ட் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது.

பொன்னேரி கச்சேரி சாலையில் வசிக்கும் மக்கள் வாழ்வுரிமை சங்கத்தை சேர்ந்த முனைவர் ராஜா என்பவர் வழக்கு தொடுத்திருந்தார்.

இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவில் ஏரி நீர் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பை ஜேசிபி எந்திரம் மூலம் பொன்னேரி வட்டாட்சியர் ரஜினிகாந்த் தலைமையிலான வருவாய்த் துறையினர் இடித்து அகற்றினர்.

  • Mari Selvaraj Rajinikanth Movie இரண்டு முறை கதை கேட்டும் மாரி செல்வராஜை ஒதுக்கிய பிரபல ஹீரோ..காரணம் இது தானா.!