ஹோட்டலில் சாப்பிட்டு பணம் தர மறுப்பு : கேள்வி கேட்ட உரிமையாளரை தாக்கி கடையை சூறையாடிய திருநங்கைகள்.. ஷாக் சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
18 April 2022, 6:45 pm
Transgender Attack Hotel -Updatenews360
Quick Share

விழுப்புரம் : தனியார் உணவகத்தில் சாப்பிட்டு பணம் தர மறுத்த திருநங்கைகளிடம் கேள்வி கேட்ட உணவக உரிமையாளர் உட்பட உணவகத்தை சூறையாடிய திருநங்கைகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று மிஸ் கூவாகம் நடைபெறுகிறது. இந்நிலையில் திருநங்கைகள் தாலி கட்டும் தாலி அறுக்கும் நிகழ்ச்சியும் தேரோட்டமும் நடைபெற உள்ளது.

இதை முன்னிட்டு விழுப்புரத்தில் ஏராளமான திருநங்கைகள் குவிந்துள்ளனர். இதில் இன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தனியார் உணவகத்தில் (அண்ணாத்த ஓட்டல்) ஏராளமான திருநங்கைகள் அங்கு உணவு சாப்பிட்டு உள்ளனர்.

இதில் சிக்கன், மட்டன், காடை, தந்தூரி என பலவகை உணவை சாப்பிட்டுவிட்டு ஹோட்டல் உரிமையாளருக்கு பணம் கொடுக்காமல் ஏமாற்றி உள்ளனர். இதனை அறிந்த அவர் திருநங்கைகளிடம் கேட்டுள்ளார்.

இதனை அடுத்து ஒன்று கூடிய திருநங்கை அனைவரும் ஹோட்டலை சூறையாடி கற்களால் மற்றும் அங்கு உள்ள பொருட்களை தாக்கி ஹோட்டல் உரிமையாளர் உட்பட பலரை கும்பலாக கூடி கும்மியடித்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அடிப்படையில் தாலுகா போலீசார் சம்பவ இடத்தில் வந்து விசாரணை மேற்கொண்டு தற்போது அந்த ஓட்டலுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் மட்டுமில்லாமல் மாவட்டத்தில் பெருமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.

Views: - 430

0

0