கோவை மாநகராட்சி துணை ஆணையராக டாக்டர். ஷர்மிளா நியமனம் : ஓரிரு தினங்களில் பதவியேற்கிறார் !!

Author: Udayachandran RadhaKrishnan
21 September 2021, 8:41 pm
Cbe Corp - Updatenews360
Quick Share

கோவை : கோவை மாநகராட்சியின் புதிய துணை ஆணையராக ஷர்மிளா நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு கோவையில் பல்வேறு துறைகளில் அதிகாரிகள் அடுத்தடுத்து மாற்றம் செய்யப்பட்டனர். அந்த வகையில், மாநகராட்சியின் துணை ஆணையராக பணியாற்றி வந்த மதுராந்தகி திருப்பூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து கோவை மாநகராட்சியின் துணை ஆணையராக விமல்ராஜ் கடந்த ஜூலை மாதம் நியமிக்கப்பட்டார். ஆனால், அவரை பணியில் இருந்து விடுவித்து கடந்த 17ம் தேதி மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து அவர் திருநெல்வேலி மாவட்ட நிலஎடுப்பு பிரிவு வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சூழலில், மாநகராட்சியின் புதிய துணை ஆணையராக மருத்துவர்.ஷர்மிளா நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் சென்னையில் தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தில் வருவாய் அலுவலராக தற்போது பணியாற்றி வருகிறார். அடுத்த ஒரு சில தினங்களில் இவர் கோவையில் பொறுப்பேற்பார் என்று கூறப்படுகிறது.

இதேபோல் தமிழகம் முழுவதும் மாவட்ட வருவாய் அலுவலர் அந்தஸ்தில் இருக்கும் 25 அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு தலைமைச்செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 159

1

0