முழு ஊரடங்கு: மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய கோவையின் முக்கிய சாலைகள்..!!

Author: Rajesh
23 January 2022, 10:26 am
Quick Share

கோவை: முழு ஊரடங்கையொட்டி முக்கியச் சாலைகளில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் காணப்படுகிறது

தமிழக அரசு நோய்த்தொற்றை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. இதனையொட்டி கோவை காந்திபுரம், ரயில் நிலையம், டவுன் ஹால், லட்சுமி மில், வடகோவை, பூ மார்க்கெட், ராமநாதபுரம், சிங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் காணப்படுகிறது.

பொதுமக்கள் அநாவசியமாக யாரும் வெளியே வரவேண்டாம் என காவல்துறை தெரிவித்துள்ளது. கோவையில் முக்கிய சாலை பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வாகன சோதனையை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.

கோவை மற்றும் அரசு மருத்துவமனைகளில் 14528 படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளதாகவும், 170 மைக்ரோ கண்டைன்மெண்ட் ஜோன் கண்டறியப்பட்டு அந்த பகுதியில் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

நோய் தொற்று சிகிச்சை மேற்கொள்பவர்களை விட சிகிச்சை முடிந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 376

0

0