அமாவாசை நாளன்று பண்ணாரி கோவிலுக்கு வர பக்தர்களுக்குத் தடை : வெறிச்சோடிய கோவில்!!

By: Udayachandran
16 October 2020, 11:41 am
bannari Amman - Updatenews360
Quick Share

ஈரோடு : சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரியம்மன் திருக்கோவிலுக்கு இன்று அமாவாசை தினத்தன்று கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் வர தடை விதித்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் திருக்கோவில் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு தமிழகம் மற்றும் கர்நாடகம் மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.

கடந்த பிப்ரவரி மாதம் கொரோனோ அச்சுறுத்தல் காரணமாக அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்ட நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அனைத்து வழிபாட்டு தலங்களும் அரசு விதிமுறையை பின்பற்றி திறந்து கொள்ளலாம் என தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது.

இதனையடுத்து சத்தியமங்கலம் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள பண்ணாரி அம்மன் திருக்கோயில் திறக்கப்பட்டு தமிழக அரசு விதிக்கப்பட்ட விதி முறையின் கீழ் சமூக இடைவெளியை பின்பற்றியும் முகக்கவசம் அணிந்தும் பண்ணாரி அம்மன் திருக்கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இன்று அமாவாசை வெள்ளிக்கிழமை தினத்தன்று பண்ணாரி அம்மனை தரிசிப்பதற்காக அதிக அளவில் பக்தர்கள் வரக்கூடும் எனவும் இதனால் பண்ணாரி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவில் நிர்வாகம் இன்று காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் பண்ணாரி அம்மன் திருக்கோவிலில் பக்தர்கள் வழிபட தடை விதித்துள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதனால் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டு வந்த பண்ணாரி அம்மன் திருக்கோயில் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது.

Views: - 45

0

0