பாதி வழியில் பாத யாத்திரையை முடித்து பேருந்தில் பழனிக்கு விரைந்த பக்தர்கள் : அலைமோதிய கூட்டம்.. கட்டுப்பாடுகளால் வியாபாரிகள் வேதனை!!
Author: Udayachandran RadhaKrishnan6 January 2022, 4:42 pm
தமிழகத்தில் வெள்ளி சனி ஞாயிறு ஆகிய நாட்களில் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதித்துள்ள உத்தரவை அடுத்து பழனி கோவிலில் இன்று ஒரேநாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளதை தொடர்ந்து தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இதன்படி இன்று முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் வெள்ளி,சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் கோவில்,மசூதி, தேவாலய்ங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு பக்தர்கள் சென்று வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பழனி கோவிலில் வருகிற 12-ஆம் தேதி தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள வழிபாட்டு தலங்களுக்கான தடை அறிவிப்பு காரணமாக பாதையாத்திரை வரும் பக்தர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். மேலும் பாதயாத்திரை மேற்கொண்டுள்ள ஆயிரக்கணக்கான பக்தர்களில் பலர் பாதயாத்திரையை பாதியில் கைவிட்டு பேருந்துகளில் ஏறி பழனி வந்தடைந்தனர்.
இதனால் சபரிமலை பக்தர்கள் கூட்டத்துடன் பாதயாத்திரை பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய வந்ததால், பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஒரே நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகையால் தைப்பூசத் திருவிழாவின் போது குவியும் கூட்டத்தை விட தற்போது அதிக கூட்டம் ஏற்பட்டுள்ளதால் நீண்ட நேரம் காத்திருந்து சாமிதரிசனம் செய்துவருகின்றனர்.
0
0