பழனி ஆண்டவரை தரிசிக்க படையெடுத்த பக்தர்கள் : ஒரு மணி நேரத்திற்கு ஆயிரம் பேர் மட்டுமே அனுமதி!!

5 July 2021, 2:12 pm
Palani Allowed - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : ஆறு படை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் இன்று முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் கொரானா காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டது‌.

இதனையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் படிவழிப்பாதையில் சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். காலை 6மணிமுதல் பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப் படுகின்றனர்.

அன்னதானம், ரோப்கார் ஆகிய சேவை நிறுத்தப்பட்டுள்ளது.மின்இழுவை ரயில் சேவை மட்டும் இயக்கப்படுகிறது. மேலும் விபூதி மற்றும் பஞ்சாமிர்தம் ஆகிய பிரசாதங்களும் வழங்காமல் சாமிதரிசனம் செய்து வருகின்றனர்.

ஆன்லைனில் பதிவுசெய்து வரும் பக்தர்களை ஒரு மணிநேரத்திற்கு ஆயிரம் பேர் வீதம் அனுமதிக்கப்படுகின்றனர். நீண்ட நாட்களுக்கு சாமிதரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் உணர்ச்சிமிகுதியுடன் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்

Views: - 152

0

0