பிரசித்தி பெற்ற கோவில்களில் பக்தர்களுக்கு தடை : மதுரை மீனாட்சியம்மனை வாசலில் நின்று தரிசனம் செய்த பக்தர்கள்!!!

Author: Udayachandran RadhaKrishnan
2 August 2021, 10:49 am
Madurai Meenatchi - Updatenews360
Quick Share

மதுரை : பிரசித்திபெற்ற கோவில்களில் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் கோவிலில் வாசலில் நின்றபடி பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கொரோனா 3ஆம் அலையை தடுக்கும் விதமாக இன்று முதல் வரும் 8 ஆம் தேதி வரை மதுரையில் பிரசித்திபெற்ற கோவில்களான மதுரை மீனாட்சியம்மன் கோவில், கள்ளழகர் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், பழமுதிர்சோலை முருகன் கோவில் ஆகிய 4 கோவில்களில் பொதுமக்கள் தரிசனம் செய்வதற்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.

இதையடுத்து இன்று அதிகாலை முதலே பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் வெளியூரில் இருந்து வந்திருந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றமடைந்தனர். பக்தர்கள் கோவில் வாசலில் நின்றபடியே சாமி தரிசனம் செய்தனர்.

ஆடிப் பெருக்கான நாளைய தினம் கோவில்களில் சாமி தரிசனம் செய்ய முடியாத நிலையும், அழகர்கோவிலில் நேர்த்திகடன் நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பக்தர்கள் வேதனை தெரிவித்தனர்.

மதுரை மாவட்டத்தில் இன்று முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத கடைகள், வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஆடிப் பெருக்கான நாளை நகைக்கடை உள்ளிட்ட கடைகளை கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்கு சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 302

0

0