வைகுண்ட ஏகாதசி வழிபாடு…கோவில்களின் பக்தர்களுக்கு அனுமதி: அறநிலையத்துறை அமைச்சர் அறிவிப்பு..!!

Author: Aarthi Sivakumar
12 January 2022, 5:33 pm
Quick Share

சென்னை: நாளை வைகுண்ட ஏகாதசியையொட்டி கோவில்களில் பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதி அளித்து அறநிலையத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா, ஒமைக்ரான் தொற்று தற்போது அதிக அளவு பரவ தொடங்கி உள்ளது. இதையடுத்து, வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாட்கள் அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் பக்தர்கள் செல்ல தமிழக அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும், நாளை மறுநாள் முதல் தை பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல், தைப்பூசம் உள்ளிட்ட விழாக்கள் தொடர்ச்சியாக வருகின்றன. இதன் காரணமாக கோவில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் நாளை மறுநாள் முதல் 18ம் தேதி வரை 5 நாட்கள் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், வைகுண்ட ஏகாதசி தினமான நாளை கட்டுப்பாடுகளுடன் கோவில்களில் வழிபாடு செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று தினங்கள் மட்டுமே கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவித்துள்ளார்.

Views: - 218

0

0