டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகார் : விசாரணை அதிகாரி நியமனம்

1 March 2021, 3:20 pm
rajesh doss - updatenews360
Quick Share

டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகார் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி ஏடிஎஸ்டி கோமதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு பணிகளுக்காக கடந்த 21ம் தேதி திருச்சி, புதுக்கோட்டைக்கு சென்றிருந்த டிஜிபி ராஜேஷ்தாஸ், அங்கு பணியில் ஈடுபட்டிருந்த இளம்பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக அந்தப் பெண் அதிகாரி டிஜிபி ஜே.கே. திரிபாதி, உள்துறை கூடுதல் தலைமை செயலர் எஸ்.கே. பிரபாகரிடம் கடந்த 23ம் தேதி புகார் கொடுத்தார். இது தொடர்பாக விசாரணை கமிட்டி அமைத்து உள்துறை கூடுதல் தலைமை செயலர் உத்தரவிடிருந்தார். அதோடு, டிஜிபி திரிபாதி விசாரணை செய்ய போலீசாருக்கு உத்தரவிட்ட நிலையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இது தொடர்பாக தானாக முன்வந்து விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம், புகாரை விசாரணை செய்யும் அதிகாரியாக சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, சென்னை சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் வழக்கை விசாரிக்கும் அதிகாரி மாற்றப்பட்டுள்ளார். ஏ.டி.எஸ்.பி.கோமதிக்கு பதில் சிபிசிஐடி எஸ்.பி. முத்தரசி விசாரணை நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் மீதான வழக்கு என்பதால் எஸ்.பி. அந்தஸ்தில் உள்ள அதிகாரி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

Views: - 12

0

0