பிரச்சனை எல்லாம் ஓவர்.. மகனுக்காக இணைந்த தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதி : வைரலாகும் புகைப்படம்!

Author: Udayachandran RadhaKrishnan
22 August 2022, 3:59 pm
Dhanush Aishwarya - Updatenews360
Quick Share

தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதியாக வலம் வந்தவர்கள் தான் தனுஷ்- ஐஸ்வர்யா, இவர்கள் கடந்த மாதம் பிரிய போவதாக அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினர். இதன் மூலம் அவர்களது 18 வருட திருமண வாழ்க்கை முறிந்தது. அதைத் தொடர்ந்து இருவரும் அவரவர் வேலைகளில் கவனம் செலுத்த தொடங்கினர். இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களின் எதிர்காலம் என்னவாக இருக்குமோ? சூப்பர் ஸ்டார் ரஜினியின் மன நிலைமை எப்படி இருக்குமோ? என பலரும் வருத்தப்பட்டனர்.

இந்த நிலையில் தனுஷ், ஐஸ்வர்யா தம்பதியின் மூத்த மகன் யாத்ரா படிக்கும் பள்ளிக்கு இன்று ஐஸ்வர்யா சென்றுள்ளார். அங்கு தனது மகன் விளையாட்டு அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளதை அவர் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

காவி கொடியை கொண்ட அணி ஒன்றுக்கு தனது மகன் தான் கேப்டன் என்பதையும் ஐஸ்வர்யா பெருமையுடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்த புகைப்படத்தை திங்கள் காலையில் பதிவு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று ஐஸ்வர்யா அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த விழாவில் நடிகர் தனுஷும் பங்கேற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ், ஐஸ்வர்யா மற்றும் அவர்களது இரண்டு மகன்களுடன் இணைந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் பாடகர் ஜேசுதாஸின் மகன் விஜய் ஜேசுதாஸ் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் மகன் யாத்ரா விளையாட்டு அணிக்கு கேப்டன் ஆகியுள்ளதை அடுத்து இந்த விழாவில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் இணைந்து பங்கேற்றுள்ளதை அடுத்து, இதேபோல் இருவரும் நிரந்தரமாக இணைய வேண்டும் என ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

  • Senthil Balajiகிளைமாக்ஸ்க்கு நெருங்குகிறதா செந்தில் பாலாஜி வழக்கு? நாள் குறிச்சாச்சு… நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்..!!
  • Views: - 549

    1

    0