ரீ-ரிலீஸாகும் தனுஷின் சர்ச்சைக்கு உள்ளான திரைப்படம்.. பல வருடங்களுக்கு பிறகு வெளியாகிறது.!

Author: Rajesh
3 July 2022, 1:32 pm
Quick Share

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ், இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் இந்தியளவில் கவனம் பெறுவதை பார்த்து வருகிறோம். ஆனால் அசுரன் திரைப்படத்திற்கு பின் தனுஷ் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் அவ்வளாவாக வரவேற்பை பெறவில்லை, மேலும் தொடர்ந்து அவரின் திரைப்படங்கள் OTT-யில் தான் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் நேற்று தனுஷ் நடிப்பில் உருவாகவுள்ள பெரிய பட்ஜெட் திரைப்படமான Captain Miller திரைப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகியிருந்தது. அப்படம் குறித்து ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

இதற்கிடையே தற்போது தற்போது தனுஷின் அறிமுக திரைப்படமான துள்ளுவதோ இளமை மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளது. செல்வராகவனின் திரைகதையில் கஸ்தூரி ராஜாவின் இயக்கத்தில் இப்படம் வெளியான போது சர்ச்சையாக பேசப்பட்டது.

ஆனாலும் கூட இப்படம் அப்போதைய இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. மேலும் தற்போது இப்படத்தை வரும் ஜூலை 8 ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர். துள்ளுவதோ இளமை திரைப்படம் மீண்டும் வரவேற்பை பெறுகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Views: - 646

1

0