சோதனை மேல் சோதனையில் தனுஷ்.? வைரலாகும் புகைப்படம்.!

Author: Rajesh
17 May 2022, 11:12 am
Quick Share

நடிகராக தனது கலை பயணத்தை தொடங்கிய நடிகர் தனுஷ், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல துறைகளில் சாதித்து வருகிறார். இதில் தயாரிப்பாளராக தனது வுன்டர்பார் நிறுவனத்தின் மூலம் திரைப்படங்களை தயாரித்து வந்தார்.

இந்த நிறுவனத்தை தனுஷ் மற்றும் அவரது முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் இணைந்து 2010ம் ஆண்டு தொடங்கினர். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் முதன் முதலாக வெளியான திரைப்படம் 3. ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய இப்படத்தில் தனுஷ் மற்றும் ஸ்ருதி ஹாசன் நடித்திருந்தனர். இப்படத்திற்க்கு ஆர்.கே. ப்ரொடக்ஷன்ஸ் உடன் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்தது.

இதனைத் தொடர்ந்து, எதிர் நீச்சல், வேலையில்லா பட்டதாரி, காக்கி சட்டை, மாரி, நானும் ரவுடி தான், தங்கமகன், பா பாண்டி, VIP 1, VIP 2, காலா, வட சென்னை, மாரி 2 போன்ற படங்களை தயாரித்தார். இந்நிலையில், இவர்களது யூடியூப் சேனல் ஹாக் செய்யப்பட்டுள்ளது குறித்து சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது. பாலாஜி மோகன் இயக்கிய மாரி 2 படத்தில் தனுஷ் மற்றும் சாய் பல்லவி ஜோடியாக நடித்தார்கள். அதில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் யூடியூபில் பல சாதனைகளை செய்தது.

இப்பாடல் யூடியூபில் 1.35 +B பார்வையாளர்களை பெற்று சாதனை லிஸ்டில் இருந்தது. ஆனால் தற்போது அந்த பாடலும் ஹேக் செய்ததில் இல்லாமல் போனது. இதனை எப்படியாவது யூடியூப் டீம் சரி செய்து தர வேண்டும் என ரசிகர்கள் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.

Views: - 368

0

0