பல சாதனைகள் புரிந்த “ஒய் திஸ் கொலவெறி”-க்கு புது சோதனை .. நெட்டிசன்கள் பதிலடி.!

Author: Rajesh
12 May 2022, 7:24 pm
Quick Share

தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘3’. அனிருத் இசையமைத்திருந்த இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் பெரிய வரவேற்பை பெற்றன.

குறிப்பாக, அனிருத் இசையில், தனுஷ் எழுதி, பாடியநிலையில், கடந்த 2011-ம் ஆண்டு யூ-ட்யூப்பில் வெளியான ‘ஒய் திஸ் கொலவெறி டி’ பாடல் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்து, பட்டையை கிளப்பியது. உலகளவில் இந்தியாவிலிருந்து முதன்முறையாக யூ-டியூப்பில் பல சாதனைகளைப் படைத்த இந்தப் பாடலுக்கு, சோதனையாக தற்போது புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

துருக்கியில் வெளியான கோககோலா விளம்பரத்தின் பாடலை காப்பி அடித்து, ‘ஒய் திஸ் கொலவெறி டி’ பாடல் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி, பலரும் துருக்கியின் விளம்பரப் பாடல்களை பகிர்ந்து வருகின்றனர். ஆனால் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஒய் திஸ் கொலவெறிப் பாடலைத் தான் விளம்பரத்தில் காப்பி அடித்துள்ளதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். கடந்த 2011-ம் ஆண்டு ஒய் திஸ் கொலவெறி டி பாடல் வெளியான நிலையில், துருக்கியில் வெளியான இந்த விளம்பரப் பாடல் 2015-ம் ஆண்டு வெளியானதாக கூறி, பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Views: - 531

1

1