திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் களைகட்டிய பிரச்சாரம் செருப்பு தைத்து திமுக வேட்பாளர் வாக்குசேகரித்த நிகழ்வு அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிலர் பல்வேறு வகையான நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக 7வது வார்டு நகரமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.முகமது யூசுப், பொதுமக்களுக்கு செருப்புத் தைத்துக் கொடுத்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.
இதைத்தொடர்ந்து, தாராபுரம் நகர தலைமை உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தின் சார்பாக திமுக 7வது வார்டு எஸ். முகமது யூசுப் அவர்களுக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்தனர்.
அப்போது, மாவட்ட தலைவர் சிவக்குமார், மாவட்ட செயலாளர் முருகானந்தம், கார்த்திக், நகர பொறுப்பாளர் கார்த்தி, சதீஷ், அசோக், சீனீ, குண்டடம் ஒன்றிய பொறுப்பாளர் தினேஷ், திருப்பதி மற்றும் மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் சோலை கடைவீதி பகுதியில் பேக்கரி ஒன்றில் வாடிக்கையாளர்களுக்கு போண்டா சுட்டு கொடுத்து திமுக வேட்பாளர் முகமது யூசுப் பிற்கு உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…
This website uses cookies.