அண்ணியுடன் தகாத உறவு: உல்லாசம் அனுபவித்து உயிரை பறித்த கொளுந்தன்!! திருப்பூர் அருகே அதிர்ச்சி சம்பவம்!!!

Author: Udayaraman
1 August 2021, 9:52 pm
Quick Share

திருப்பூர்: தாராபுரம் அருகே தகாத உறவால் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து மூலனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்துள்ள மூலனூர் திருநீலகண்ட புரத்தைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவரது மனைவி கிருத்திகா. கோவில் சிற்ப பணிகள் பார்த்து வரும் பொன்னுச்சாமியின் உறவினர் கந்தசாமி இவருக்கு திருமணமாகி அனுசுயா என்ற மனைவியும், மணிகண்டன் என்ற எட்டு வயது சிறுவனும் உள்ளனர். இந்த நிலையில் கந்தசாமியின் மனைவி மற்றும் மகனை பிரிந்து 4 ஆண்டுகளாக தனியாக திருநீலகண்டர் புரத்தில் உறவினர் பொன்னுச்சாமி வீட்டின் எதிரே தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். அப்போது உறவினர் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது உறவினர் பொன்னுச்சாமி இல்லாத நேரத்தில் கீர்த்திகா விடம் தகாத உறவு வைத்து வந்துள்ளார்.

இந்தநிலையில் பொன்னுச்சாமி வீட்டில் இல்லாதபோது இன்று கீர்த்திகாவை கந்தசாமி தங்கியிருக்கும் வீட்டிற்கு வரவழைத்து கிருத்திகாவும், கந்தசாமியும் தகாத உறவில் ஈடுபட்ட இருந்தபோது கந்தசாமி மதுபோதையில் கிருத்திகாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில் அருகில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து சரமாரி கிருத்திகாவின் உடலில் குத்தியதில் சம்பவ இடத்திலேயே கிருத்திகா ரத்த வெள்ளத்தில் துடிக்கத் துடிக்க அலறல் சத்தத்துடன் இறந்து போனார். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் மூலனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் தாராபுரம் துணைக் கண்காணிப்பாளர் தனராசு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த கீர்த்திகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என கண்டறிய திருப்பூரிலிருந்து கைரேகை நிபுணர் மற்றும் மோப்பநாய் டேவிள் வரவழைக்கப்பட்டு தொடர் விசாரணையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Views: - 517

0

2