“தமிழ் பிழையில்லாமல் எழுத தெரியாது“ : சரண்டரான தி.மு.க எம்.பி.!!

15 September 2020, 2:10 pm
DMK MP - updatenews360
Quick Share

தமிழை தப்பில்லாமல் எழுத தெரியாது என கூறியுள்ள திமுக எம்பி செந்தில்குமார் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக மும்மொழிக் கொள்கைக்கு தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக டிவிட்டரில் பல ஹேஷ்டேகுகளை டிரெண்டாக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழை நாங்கள் எதிர்க்கவில்லை என்றும், விருப்பம் இருந்தால் மூன்றாவது மொழியை படிக்கலாம் எனவும் பாஜக தெரிவித்து வருகின்றது. இந்த நிலையில் தமிழக பாஜக துணைத் தலைவராக பொறுப்பேற்ற முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, டிவிட்டரில் திமுகவிற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் தருமபுரி மக்களவை தொகுதி எம்பியான செந்தில்குமார், அண்ணாமலையின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து மோதலில் ஈடுபட்டார். இந்த நிலையில் இருவரும் டிவிட்டரில் விவாதம் நடத்த தயார் என அறிவிப்பு வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையில் திமுக எம்பி செந்தில்குமார், தனக்க தமிழ் பிழையில்லாமல் எழுத தெரியாது என்ற கருத்தை வெளியிட்டிருந்தார். இந்த கருத்து பூதகரமாகி சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள எம்.பி. செந்தில்குமார், ஏற்காடு பள்ளியில் 5ஆம் வகுப்பு வரை மட்டுமே தமிழை பயின்றதாகவும், பின்னர் பிரெஞ்சு மொழியை தேர்வு செய்து படித்ததாக கூறியுள்ளார்.

அதே போல இந்தி பேச படிக்க தெரியாது என சுட்டிக்காட்டிய அவர், தமிழ் பேசுவது சுலபம் ஆனால் தான் படித்த பள்ளி ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பள்ளி என்பதால் தமிழை முழுமையாக பிழையின்றி எழுத தெரியாது என்று கூறியுள்ளார்.

தமிழ், தமிழ் என கோஷமிடும் திமுகவினர், தமிழ் தெரியாத ஒருவரை எம்பி ஆக்கியுள்ளது என மக்கள் மனதில் ஆதங்கம் ஏற்பட்டுள்ளது. அதே போல தமிழ் மீது பற்று என கூறும் திமுகவின் லட்சணம், எம்.பி செந்தில்குமாரின் கருத்தில் தெரிந்துள்ளது என நெட்டிசன்கள் ஏசி வருகின்றனர்.