வீட்டில் வைத்து பொதுமக்களுக்கு வைத்தியம்… போலி பெண் டாக்டர் கைது ; மருத்துவ குழுவினர் அதிரடி!!

Author: Babu Lakshmanan
17 March 2023, 9:13 pm
Quick Share

தருமபுரி ; பொதுமக்களுக்கு வீட்டில் வைத்தியம் பார்த்து வந்த பாப்பிரெட்டிப்பட்டி அருகே போலி பெண் மருத்துவரை மருத்துவ இணை இயக்குனர் சாந்தி தலைமையில் மருத்துவ குழுவினர் கையும் களவுமாக பிடித்தனர்.

தர்மபுரி மாவட்டத்தில் அதிக அளவில் போலி மருத்துவர்கள் உள்ளதாக இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவ சுகாதாரத் துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வெங்கட சமுத்திரம் கிராமத்தில் வீட்டிலேயே பொது மக்களுக்கு ஊசி போடுதல், மருத்துவம் பார்த்தல் போன்ற பணிகளை நீண்ட காலமாக செய்து வந்த தேவி என்பவரை தர்மபுரி மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் சாந்தி நேரடியாக களத்தில் இறங்கி போலி மருத்துவரின் வீட்டுக்கே சென்று கையும் களவுமாக பிடித்தார்.

அப்போது போலி மருத்துவர் தேவியின் வீட்டிலிருந்து மருந்து மாத்திரைகள், ஸ்டெத்தஸ்கோப், நெபுலேசர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை கைப்பற்றினர். போலி மருத்துவர் தேவியின் மீது பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த நடவடிக்கை தருமபுரி மாவட்டத்தில் போலி மருத்துவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, கடந்த எட்டு மாதத்திற்கு முன்பு கருக்கலைப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை தொடர்ந்து போலி மருத்துவர் என்பது தர்மபுரி மாவட்டத்தில் பெரிய அளவில் நடைபெற்று வருவதால் மாவட்ட நிர்வாகம் போலி மருத்துவர்களை கண்டறிவதில் தீவிரம் காட்டி வருகிறது.

Views: - 99

0

0

Leave a Reply