55 வயது பாட்டியுடன் தகாத உறவில் இருந்த 19 வயது வாலிபர் மர்ம மரணம் : நடவடிக்கை கோரும் வாலிபரின் தாய்…!!

Author: Udhayakumar Raman
28 June 2021, 6:58 pm
Quick Share

தருமபுரி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பாப்பம்பட்டி கிராமத்தில் 19 வயது மகனுடன் தகாத உறவு வைத்திருந்த 55 வயது பெண் மீது நடவடிக்கை எடுக்ககோரி பெற்றோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பாப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த குணசேகரன், பூங்கொடி தம்பதியினர் மகன் சுரேஷ், 19 வயது. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாட்டி முறையாகும் போதுலட்சுமி 55 வயது பெண்ணிற்கும் கடந்த ஓர் ஆண்டுகளுக்கு மேலாக தகாத உறவு இருந்துள்ளது. இதனை அறிந்த சுரேஷின் பெற்றோர் உனக்கு அப்பெண் பாட்டி முறை எனவே இது தவறான உறவு என கண்டித்துள்ளனர். இதனை மீறியும் சுரேஷ் அந்த பெண்ணிடம் மறைமுகமாக தொடர்பு வைத்திருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி போதுலட்சுமியின் வீட்டின் அருகே சுரேஷ் மர்மான முறையின் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்துள்ளார். இதனை அறிந்த பள்ளிப்பட்டி காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தனது மகன் இறப்புக்கு காரணம் போதுலட்சுமி தான் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிப்பட்டி காவல்நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என அவரது பெற்றோர் இன்று தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அந்த புகார் மனுவில், தன் மகனுடன் தகாத உறவு வைத்துக்கொண்ட பாட்டி முறையாகும் போதுலட்சுமி என்பவர் தன் மகனை ஏமாற்றி பணம், நகை பறித்துள்ளார். இந்தநிலையில் தனது மகன் மர்மமான முறையில் இறந்துள்ளார். இறப்பில் சந்தேகம் உள்ளது. இதற்கு காரணமான போதுலட்சுமி மற்றும் அவரது மகன் எனவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Views: - 420

0

0