ஆந்திராவிற்கு செம்மரம் வெட்ட சென்றவர்கள் சடலமாக கண்டெடுப்பு..! மற்றவர்களின் நிலை கேள்விக்குறி..??

Author: Udhayakumar Raman
28 November 2021, 9:06 pm
Quick Share

தருமபுரி: சித்தேரி பகுதியை சேர்ந்தவர்கள் ஆந்திராவில் செம்மரம் வெட்ட சென்ற போது நேற்று ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், இன்று ஒருவர் ஆந்திரா வனப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

தருமபுரி மாவட்டம், அரூர் அருகே சித்தேரி மலை கிராம பஞ்சாயத்தில் மலைவாழ் மக்கள் மட்டும் வசித்து வரும், 62 கிராமங்கள் உள்ளது. இந்தப் பகுதியைச் சார்ந்த பலர் ஆந்திரா மாநிலத்தில் பல்வேறு வனப் பகுதியில் செம்மரம் வெட்டும் கூலி வேலைக்கு செல்கின்றனர். அதே போல் கடந்த சில தினங்களுக்கு முன்பு சித்தேரி பகுதியிலிருந்து 4 பேர் ஆந்திராவிற்கு செம்மரம் வெட்ட வனப்பகுதிக்குள் சென்ற போது அங்கிருந்த ஆந்திரா போலீசார் இவர்களை துரத்தி உள்ளனர். இதில் சித்தேரி பகுதியை சேர்ந்த ராமன் என்பவர் பாறையிலிருந்து குதிக்கும் போது பலத்த காயம் ஏற்பட்டதாக உடன் சென்றவர்கள் அவரை மீட்டு சொந்த ஊரான சித்தேரிக்கு காரில் அழைத்து வந்துள்ளனர்.

வரும் வழியிலியே ராமன் இறந்து விடுவதால், செம்மரம் வெட்டு சென்ற போது உயிரிழந்த சம்பவம் தெரிந்ததால் பிரச்சனையாகி விடும் என்பதால் இறந்த ராமன் உடலை சித்தேரி அருகே நேற்று வீசி சென்றனர். தகவல் அறிந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில் சித்தேரியிலிருந்து ஆந்திராவிற்கு செம்மரம் வெட்ட நேற்று இறந்த ராமனுடன் சென்ற பாலகிருஷ்ணன் என்பவர் இன்று ஆந்திரா வனப்பகுதியில் சடலமாக மீட்டுள்ளனர். இறந்த இருவருடன் சென்ற இருவர் நிலை என்வென்று தெரியாததால் சித்தேரி மலைகிராம மக்கள் சோகத்தில் உள்ளனர்.

Views: - 253

1

0