‘ரொம்ப பாசம் வச்சிருந்தேன்… ஆனா கேட்கல’ : மனைவியை கொன்றுவிட்டு தற்கொலை செய்த கணவனின் அதிர்ச்சி கடிதம்..!!!

8 March 2021, 2:17 pm
Dharmapuri murder - updatenews360
Quick Share

தருமபுரி : தருமபுரி பிடமனேரி பகுதியில் மனைவியை கொலை செய்த கணவன், தானும் தூக்கிட்டு தற்கொலை செய்த கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தருமபுரி பிடமனேரி கோவிந்த தாஸ் தெருவைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் மருந்து கம்பெனியில் விற்பனைப் பிரதிநிதியாக பணியாற்றி வந்தார். பின்னர், அதே பகுதியில் சிறிய மளிகை கடை ஒன்று வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி திவ்யா (32). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

கணவன் – மனைவி இடையே நீண்ட நாளாக குடும்பத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, நேற்றிரவு கணவன் – மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் ராஜ்குமார் தனது மனைவி திவ்யாவை கழுத்து அறுத்து கொலை செய்துவிட்டு, தனது பாட்டிக்கு போன் செய்து குழந்தைகளை பார்த்துக் கொள்ளவும் என்று கூறிவிட்டு, வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தருமபுரி நகர ஆய்வாளர் சரவணன் வழக்குப் பதிவு செய்து சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். இந்த சம்பவத்திற்கு காரணம் என்னவென்று காவல்துறையினர் வீட்டில் சோதனை செய்த போது ராஜ்குமார் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அந்த கடிதத்தில் ராஜ்குமார் எழுதியிருந்ததாவது :- தன் மனைவி மீது அதிகம் பாசம் வைத்திருந்தேன். அவர் வேறு ஒருவருடன் தவறாக பழகி வந்தார். அந்த தவறான பழக்கத்தை கைவிடும்படி கெஞ்சியும் அவர் கேட்காததால் கொலை செய்தேன். இதற்கு காரணமானவரை சும்ம விட வேண்டாம், என காவல்துறைக்கு எழுதி உள்ளார்.

மேலும் இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மனைவியை கழுத்து அறுத்து கொலை செய்துவிட்டு, கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தருமபுரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 244

0

0