சொத்துக்கு ஆசைப்பட்டு மகன்களுடன் சேர்ந்து பெற்றோரை கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை: தற்கொலை நாடகமாடிய நான்கு பேரும் கைது

Author: Udhayakumar Raman
25 June 2021, 5:58 pm
Quick Share

தருமபுரி: சொத்துக்காக பெற்றோரை கொலை செய்து தற்கொலை நாடகமாடிய மகன் இரு பேரன்களைபோலீசார் கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம், பாளையம்புதூர் அருகே குட்டூர் கிராமத்தை சேர்ந்த துரைசாமி, இவரது மனைவி கோசலை இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர். துரைசாமிக்கு அதே பகுதியில், 10 ஏக்கர் விவசாயம் நிலம் உள்ளது. அந்த விவசாய நிலத்தில், அவர் மற்றும் அவரது மனைவி இருவரும் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று துரைசாமி மற்றும் மனைவி கோசலை ஆகியோர் கட்டிலில் இறந்த நிலையில் இருந்துள்ளனர். இது குறித்து அவரது மகன் ஆனந்தன் தனது தாய் மற்றும் தந்தை இருவரும் விசம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தொப்பூர் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்ததையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு உடல்களையும் கைப்பற்றி தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இன்று இருவரின் பிரேத பரிசோதனை செய்த போது இறந்த இரண்டு பேரும் கழுத்தை நெறித்ததால் இறந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கை வந்தையடுத்து,

காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்ததில் துரைசாமிக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை 3 மகள்களுக்கு 2.5 ஏக்கர் நிலத்தை பிரித்துக்கொடுத்தது போக, மீதமுள்ள 7.5 ஏக்கர் நிலத்தை மகன் ஆனந்தனுக்கு பிரித்துக்கொடுத்துள்ளார். இதில் முழு சொத்தையும் தனதுக்கு கொடுக்காத ஆத்திரத்தில் மகன் ஆனந்தன் அவரது மனைவி செல்வம் மற்றும் மகன்கள் சக்திவேல், மோகன்குமார் ஆகியோர் துரைசாமி மற்றும் கோசலையை கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு இறந்தவர்களின் வாயில் பூச்சிகொல்லி மருந்தை ஊற்றிவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நடகமாடியது தெரியவந்தது. இதனையடுத்து சொத்தின் மீது பேராசை கொண்ட மகன்,மருகள், இரண்டு பேரன்கள் ஆகிய நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Views: - 419

0

0