காட்டெருமை கூட்டத்தை மிரட்டிய செந்நாய் கூட்டம் : குடியிருப்பு பகுதியில் நடந்த வனயுத்தம்!!!

27 February 2021, 5:25 pm
Bison Wild Dog -Updatenews360
Quick Share

நீலகிரி : ஊட்டியிலிருந்து மசினகுடி செல்லும் கல்லட்டி மலைப்பாதை குடியிருப்பு பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த காட்டெருமை கூட்டத்தை செந்நாய் கூட்டம் விரட்டிய காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

கல்லட்டி மலைப்பாதை பெரும்பாலும் வனப்பகுதி வழியே செல்லும் முக்கிய சாலையாக உள்ளது கேரளா மற்றும் மைசூருக்கு செல்லும் பிரதான சாலையாகவும் உள்ளது.

குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் இந்த சாலையில் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அவ்வப்போது யானை, காட்டு மாடு உள்ளிட்ட வனவிலங்குகள் சாலையில் உலா வருவதால் மாலை 6 மணிக்குமேல் பெரும்பாலும் இச்சாலை வழியே செல்லும் வாகனங்கள் கவனத்துடன் செல்லவும் வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் கல்லட்டி வன சோதனை சாவடி அருகே உள்ள குடியிருப்பை ஒட்டி சுமார் 20க்கும் மேற்பட்ட காட்டு மாடுகள் கூட்டம் மேய்ச்சலில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது செந்நாய்கள் கூட்டம் அதை சூழ்ந்தன.

குட்டியுடன் மேய்ச்சலில் ஈடுபட்டு இருந்த காட்டு மாடுகளை செந்நாய்கள் துரத்துவதும செந்நாய்களை காட்டுமாடுகள் துரத்தும் பரபரப்பான வீடியோ காட்சிகளை அங்கிருந்து குடியிருப்பு வாசி ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்துள்ளார்.

அடர் வனப்பகுதியில் மட்டுமே காணப்படும் செந்நாய்கள் கூட்டம் தற்போது குடியிருப்பை ஒட்டிய பகுதிகளிலும் உலா வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

Views: - 9

0

0