தோற்றாலும் ஜெயிச்சாலும் அவர்தான் எங்க ‘தல’: தோனியின் ‘ Die Hard Fan’…Yellow ஜெர்சி போல் மாறிய வீடு…!!

Author: Aarthi
13 October 2020, 1:27 pm
yellow house - updatenews360
Quick Share

கடலூர்: தோனியின் வெறித்தனமான ரசிகர் ஒருவர் தன் வீட்டையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மஞ்சள் நிறத்திற்கு மாற்றி தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். தமிழகத்திலும் தோனிக்கு ‘ டை ஹார்ட் ஃபேன்’ என்று சொல்லுமளவிற்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது.

அந்த வகையில், கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த அரங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கோபிகிருஷ்ணன். தோனியின் தீவிர பக்தரான இவர் துபாயில் உள்ள ஆன்லைன் டிரேடிங் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தோனியின் மீதான அதீத அன்பை வெளிப்படுத்த தனது வீட்டையே சென்னை சூப்பர் கிங்ஸ்சின் ஜெர்சி நிறமான மஞ்சள் நிறத்திற்கு மாற்ற முடிவு செய்துள்ளார்.

இதனையடுத்து, ஒன்றரை லட்சம் செலவு செய்து தனது வீட்டை மஞ்சள் நிறமாக மாற்றி, வீட்டின் சுவர்களின் தோனியின் மாஸ் உருவங்களையும், விசில் போடு வாசகத்தையும் பொறித்துள்ளார் இந்த டைஹார்ட் தோனி ஃபேன்.

அன்பின் உச்சகட்டமாக வீட்டின் முகப்பில் home of dhoni fan என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் தோல்வி கண்டு வருவதால், அவரை மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தினரையும் சிலர் விமர்சித்து வருகின்றனர். ஜெயித்தால் மட்டுமே கொண்டாடும் அப்படிபட்ட ரசிகர்களுக்கு மத்தியில், தோத்தாலும் ஜெயிச்சாலும் தோனி தான் எங்கள் தல என்று நிற்கும் கோபிகிருஷ்ணன் போன்ற ரசிகர்கள் தான் தோனியின் பலம் என்றால் அது மிகையாகாது.

திட்டக்குடி சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் தோனியின் ரசிகரின் வீட்டை ஆச்சர்யமுடன் பார்த்து செல்கின்றனர். இதுகுறித்து தோனி ரசிகர் கோபிகிருஷ்ணன் கூறுகையில், அர்ப்பணிப்புடன் விளையாடும் தோனிதான் எப்போதும் கிரிக்கெட் உலகின் தல என்று கூறி மெய்சிலிர்க்க வைக்கிறார்.

Views: - 62

0

0