தோனி தயாரிப்பில் நயன்தாரா.. புதுவிளக்கம் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்..!

Author: Rajesh
12 May 2022, 6:18 pm
Quick Share

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமாக இருக்கும் மஹேந்திர சிங் தோனிக்கு ஏரளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. முன்னணி திரை பிரபலங்களுக்கு எந்த அளவு ரசிகர்கள் கூட்டம் உள்ளதோ அதே அளவு தோனிக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் தோனி சினிமா தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். இவரது தயாரிப்பு நிறுவனத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் உதவியாளராக இருந்து வந்த சஞ்சய் என்பவர் இணைந்துள்ளார் என்றும் இவரின் மூலமாக தோனி தமிழில் படங்களை தயாரிக்க இருப்பதாகவும் அண்மையில் சில செய்திகள் வெளியானது.

மேலும் தோனி தயாரிக்கும் படத்தில் நயன்தாரா நடிக்க போகிறார் என்கிற தகவல் இணையதள பக்கங்களில் தீயாக பரவி வந்தது. இந்நிலையில் இணையத்தில் பரவிய இத்தகைய செய்திகள் போலியானது என்று தோனியின் தயாரிப்பு நிறுவனம் அதன் வலைதள பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து தோனி எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கூறுகையில், ‘தோனி எண்டெர்டெயின்மெண்ட் சஞ்சய் என்கிற பெயரில் யாருடனும் பணியாற்றவில்லை. எங்கள் நிறுவனம் தற்போது யாரையும் பணியமர்த்தவில்லை, அதனால் யாரும் இதுபோன்ற போலியான தகவல்களை நம்பவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். மேலும் எங்கள் தயாரிப்பு குழு வேறொரு வித்தியாசமான திட்டத்தை செய்து வருகிறது. விரைவில் அந்த அற்புதமான திட்டம் குறித்து உங்களுடன் பகிர்ந்து கொள்வோம். அதுவரையில் காத்திருங்கள்’ என்று கூறப்பட்டு இருக்கிறது. மேலும் தோனி நடிகர் விஜய்யை வைத்து படம் இயக்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

Views: - 430

0

0