காமெடி நடிகரை மிரட்டினாரா சிவகார்த்திகேயன்.? இணையத்தில் வைரலாகும் வீடியோ.!

Author: Rajesh
10 May 2022, 6:11 pm
Quick Share

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து பார்க்கும் படியான திரைப்படங்களில் நடித்து, புகழ் பெற்றவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். டாக்டர் திரைப்படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் டான். இந்த படத்தினை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.

சிபி சக்கரவர்த்தி இயக்கி இருக்கும் இந்த படத்தில், பிரியங்கா மோகன், எஸ் ஜே சூர்யா, பாலசரவணன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் மே மாதம் 13ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது.

இப்படத்தில் இருந்து வெளியான எல்லா பாடல்களும் ரசிகர்கள் பேவரைட் லிஸ்டில் இடம் பெற்றுவிட்டது. இப்படத்தின் ட்ரைலர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

இந்நிலையில் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் அவர்கள் ஒரு சில நிமிடங்கள் கோபம் அடைந்து செய்தது குறித்து வீடியோ வெளியாகியுள்ளது.

மேடையில் போட்டோ எடுக்கும் சமயம் பாலசரவணன், தொடர்ந்து பேசி கொண்டிருந்ததால் சிவகார்த்திகேயன் அவரைக் கூப்பிட்டு வாயில் கை வைத்து அமைதியாக இரு என கூறியுள்ளார்.

இந்த வீடியோ பார்த்து சிவகார்த்திகேயன் கடுப்பாகிவிட்டாரா என கூறி சமூக வலைதளப் பக்கத்தில் தற்போது வீடியோ வைரலாக பரவி வருகிறது.

Views: - 435

0

0