டீசல் விலை இவ்வளவு உயர்வா?: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!!

Author: Aarthi Sivakumar
24 September 2021, 8:31 am
Quick Share

சென்னை: சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 98.96 ரூபாய், டீசல் லிட்டருக்கு 93.46 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன.

இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பை அடுத்து பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு அமலுக்கு வந்தது. அதன்படி நேற்று சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ 98.96 ஆகவும், டீசல் லிட்டர் ரூ 93.26 ஆகவும் விற்பனையானது.


இந்நிலையில் 20வது நாளாக இன்றும் பெட்ரோல் விலை மாற்றமின்றி அதே விலையில் நீடிக்கிறது. டீசல் விலை 20 காசுகள் அதிகரித்து ரூ 93.46 ஆக விற்பனை ஆகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Views: - 882

0

0