திண்டுக்கல்லில் திடீரென தீப்பிடித்த ஆம்புலன்ஸ்…! 1 மணி நேரம் போராடி தீயை அணைத்த வீரர்கள்…!!

Author: kavin kumar
7 February 2022, 1:37 pm
Quick Share

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்து முழுவதுமாக எரிந்தது.

திண்டுக்கல் அரண்மனை குளம் பகுதியை சேர்ந்தவர் தங்கச்சாமி. இவர் வாடகைக்கு ஆம்புலன்ஸ் வாகனம் ஓட்டி வருகிறார். இந்நிலையில் இன்று ஒத்த கண் பாலம் அருகே ஒரு இறந்த உடலை கொண்டு சென்று இறக்கி விட்டு பின்னர் நாகல்நகர் ரவுண்டானா அருகே அமைந்துள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை அருகாமையில் ஆம்புலன்ஸ் வாகனத்தை நிறுத்தி விட்டுச் சென்றுள்ளார்.

அப்போது திடீரென அங்கு சாலையோரம் கொட்டி வைக்கப்பட்டிருந்த குப்பை தீப்பற்றியதில் எதிர்பாராதவிதமாக அருகில் நின்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனமும் தீப்பற்றி எரிய தொடங்கியது. பின்னர் மளமளவென எரியத் தொடங்கிய தீயினால் ஆம்புலன்ஸ் வாகனம் முழுவதும் சேதமாகியது. இதுகுறித்து தகவலறிந்து வந்த திண்டுக்கல் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இதன் காரணமாக இந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இது குறித்து நகர் வடக்கு காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Views: - 483

0

0