அபாரமாக கிரிக்கெட் விளையாடும் எட்டு வயது சிறுவன்!

23 August 2020, 12:31 pm
Dgl Virat - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : பழனியில் எட்டு வயது சிறுவன் அபாரமாக கிரிக்கெட் விளையாடி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பூண்டி பகுதியை சேர்ந்தவர்கள் துரைராஜ்-ஸ்ரீவித்யா தம்பதி . இவர்களுக்கு மதுபிரசாத்(வயது 8), சிவகார்த்தி(வயது 6) என்ற இரு மகன்கள் உள்ளனர். தற்போது குடும்பத்துடன் பழனியில் தங்கி காய்கறி வியாபாரம் செய்துவரும் துரைராஜின் எட்டு வயது மகன் மதுபிரசாத் பழனியில் உள்ள தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்துவருகிறார்.

இந்நிலையில் சிறுவன் மதுபிரசாத் அபாரமாக கிரிக்கெட் விளையாடி வருகிறான். எப்படி பந்து வீசினாலும் அடிக்கும் திறன் கொண்டவராக இருக்கிறார். பேட்டிங் மட்டுமின்றி பவுலிங்கும் செய்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சிறுவன் தெரிவித்ததாவது :- கிரிக்கெட் விளையாடுவதில் அதிக ஆர்வம் உள்ளதாகவும், விராட்கோஹ்லி போல விளையாட அசைப்படுவதாகவும் தெரிவித்தான்.

சிறுவனின் தந்தை துரைராஜ் கூறியதாவது :- நான்கு வயது முதல் மகன் மதுபிரசாத் கிரிக்கெட் விளையாட்டு மீது ஆர்வம் கொண்டான். விளையாட்டாக வீசிய பிளாஸ்டிக் பந்தை லாவகமாக அடித்தான். சிலநாட்களில் எப்படி பந்து வீசினாலும் தடுத்து ஆடப்பழகினான். அவனது ஆர்வத்தை கண்டு அவன் கிரிக்கெட் விளையாட்டு விளையாட நானும்‌ உதவினேன். முறையான பயிற்சியாளர் இல்லாமல் எனக்கு தெரிந்த வகையில் கிரிக்கெட்‌ விளையாட்டை சொல்லிக் கொடுத்தேன். இதில் தற்போது ஒரிஜினல் கிரிக்கெட் பந்தில் சிறப்பாக விளையாடி வருகிறான். கிரிக்கெட் விளையாட்டிற்கு தேவையான அனைத்து உபகரணங்களைய்ம் வாங்கிக்கொடுத்து ஊக்குவித்து வருகிறேன்.

எனவே வரும்காலத்தில் கிரிக்கெட் விளையாட்டில் மதுபிரசாத் சாதனை படைக்கவேண்டும் என்ற முனைப்போடு பயிற்சி அளிக்க ஆசைஉள்ளது. ஆனால் அதற்கான வழிமுறைகள் என்னவென்று தெரியவில்லை‌. எனவே தமிழக அரசும், விளையாட்டுத்துறையும் இதுகுறித்து தங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். எட்டு வயது சிறுவன் அபாரமாக கிரிக்கெட் விளையாடுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 1

0

0