பிறந்தநாள் கேக்கை வாளால் வெட்டி அட்டூழியம்! “வாள்த்தனம்“ செய்த இளைஞர்கள் கைது!!

Author: Udayachandran
3 October 2020, 10:40 pm
Dgl Cake - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : பழனி பைபாஸ் சாலை அருகே பிறந்தநாள் கேக்கினை வாளால் வெட்டி கொண்டாடியவர்கள் மீது தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

திண்டுக்கல் முருகபவனம் பகுதியை சேர்ந்தவர் ரூபன் வயது 20. அவரும் அவரது நண்பர்கள் சிலரும் சேர்ந்து கிழக்கு மீனாட்சிநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ஒரு கோவிலில் முன்பாக பிறந்தநாள் கொண்டாடினார்.

அப்பொழுது ரூபன் பிறந்த நாள் கேக்கை ஒரு மோட்டார் சைக்கிள் மீது வைத்து வாளால் வெட்டி பிறந்த நாளைக் கொண்டாடினார். இதனை அவரது நண்பர்கள் சிலர் சமூக வலைதளங்களில் உலா விட்டனர்.

இதன் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா உத்தரவின்பேரில் அரசு விதித்த கட்டுப்பாடுகளை மீறி யும் பொது மக்களுக்கு அச்சுறுத்தல் தரும் வகையிலும் பிறந்தநாள் கொண்டாடியதாக ரூபன் மற்றும் அவரது நண்பர்கள் முருக வாகனத்தை சேர்ந்த அருண், ராஜபாண்டி, போஸ் மீனாட்சி நாயக்கன்பட்டி யைச் சேர்ந்த விஷ்வா மற்றும் பாரத் ஆகிய 6 பேர் மீது தாடிக்கொம்பு போலீசார் வழக்கு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். பிறந்தநாள் கொண்டாடிய ரூபன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Views: - 44

0

0