3 மாத கர்ப்பிணி பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு.. பெண்ணின் கணவரை கைது செய்து போலீசார் விசாரணை..!!

Author: Babu Lakshmanan
1 July 2022, 9:54 am
Quick Share

திண்டுக்கல் : கொடைக்கானலில் மூன்று மாத கர்ப்பிணியான இளம் பெண் மோனிஷா மர்மமான முறையில் உயிரிழ‌ந்த சம்பவம் தொடர்பாக அப்பெண்ணின் க‌ண‌வ‌ர் ஆரோக்கிய‌ சாம் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் வசித்து வந்த மோனிஷா என்ற 23 வயதுப் பெண் வட்டகானல் பகுதியை சேர்ந்த ஆரோக்கிய சாம் என்பவரை ஆறு மாதத்திற்கு முன்னர் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

திருமணமாகி ஆறு மாதம் முடிந்த நிலையில், 3 மாத கர்ப்பிணியாக இருந்த மோனிஷா, கடந்த ஜூன் 4ம் தேதி வீட்டில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்ததாக, காவல்துறைக்கு மோனிஷாவின் கணவர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

23 வயது மோனிஷா 3 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், அவர் எவ்வாறு தூக்கிட்டு கொள்வார் என்று, மோனிஷாவின் பெற்றோர் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, அன்றே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால், விசார‌ணை தீவிர‌ ப‌டுத்த‌வில்லை என‌ ஆத்திரமடைந்த மோனிஷாவின் பெற்றோர் மற்றும் உறவினர் க‌ட‌ந்த‌ சில‌ நாட்க‌ளுக்கு முன் நாயுடுபுரம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தொட‌ர்ந்து இன்று த‌ற்கொலைக்கு தூண்டியதாக‌ கூறி மோனிஷாவின் க‌ண‌வ‌ர் ஆரோக்கிய‌ சாம் என்ப‌வ‌ரை கொடைக்கான‌ல் காவ‌ல் துறை கைது செய்து விசார‌ணையை தீவிர‌ப்ப‌டுத்தி உள்ள‌ன‌ர்.

Views: - 506

0

0