கொடைரோடு அருகே குடும்ப தகராறு காரணமாக நள்ளிரவில் நான்கு பேரை சராமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோட்டை அடுத்த அம்மையநாயக்கனூர் அருகே தோட்ட குடியிருப்பில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற இரயில்வே ஊழியர் ராசு (67). இவர் தனது மனைவி பாண்டியம்மாளுடன் (60) தற்போது விவசாயம் செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள், நான்கு மகன்கள் உள்ளனர்.
மூத்த மகன் முத்துப்பாண்டி தனியாக வசித்து வருகிறார். இரண்டாவது, மூன்றாவது மகன்கள் சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டனர். இதனை அடுத்து கடைசி மகன் மருதுபாண்டி (30) பெற்றோருடன் வசித்து வருகிறார்.
மேலும் படிக்க: மீண்டும் அதிகரித்த தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?
இந்நிலையில் இரண்டாவது மகனின் மனைவி ஜெயலலிதாக்கும், அவரது மாமனார், மாமியாருமான ராசு குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனை அடுத்து நேற்று நடந்த தகராறு முற்றி கைகலப்பாக மாறியதில், ஜெயலலிதாவின் தந்தை முருகேசனையும், அவரது மகன் அருண்குமாரையும் ராசு குடும்பத்தினர் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த முருகேசன் மற்றும் அவரது மகன்கள், மகன்களின் நண்பர்களுடன் சேர்ந்து நேற்று நள்ளிரவு வீடு புகுந்து ராசு, மருதுபாண்டி, பாண்டியம்மாள் மற்றும் பாண்டியம்மாளின் தம்பி மலைச்சாமி உட்பட 4 பேரையும் அரிவாள் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த 4 பேரும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அம்மையநாயக்கனூர் காவல் ஆய்வாளர் குருவத்தாய் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.