பேருந்து நிலையத்தில் கத்தியை காட்டி புள்ளிங்கோ அட்டகாசம்… தர்மஅடி கொடுத்து போலீஸிடம் ஒப்படைத்த பொதுமக்கள்…!!

Author: Babu Lakshmanan
9 June 2022, 6:05 pm
Quick Share

திண்டுக்கல் : திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் கத்தியை காட்டி பயணிகளை மிரட்டியவர்களை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசிடம் ஒப்படைத்தனர்.

திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையம் இந்த பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி, மதுரை, கோவை, தேனி, போடி, கம்பம், காரைக்குடி போன்ற ஊர்களுக்கு செல்ல மையப் பகுதியாக திகழ்வது திண்டுக்கல் பேருந்து நிலையமாகும்.

இதனால், பகல் நேரம் மட்டும் நேற்று இரவு நேரங்களிலும், பொதுமக்கள் பயணிக்க இருபத்தி நான்கு மணி நேரமும் மக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். நேற்று இரவு அடையாளம் தெரியாத 3 நபர்கள் பேருந்து நிலையத்தில் பயணிகளை கத்தியை காட்டி மிரட்டி அலப்பறையில் ஈடுபட்டு ஓடவிட்டு கொண்டு இருந்தனர் .

வெகுநேரமாக இந்த மூன்று நபர்களும் கையில் கத்திகளை வைத்துக்கொண்டு, பேருந்தில் செல்லும் பயணிகளிடம் தகராறில் ஈடுபட்டு வந்து கொண்டிருந்ததால், பயணிகள் அச்சம் அடைந்து காணப்பட்டனர். நேரம் ஆக ஆக இவர்களின் அட்டகாசங்களுக்கு அளவு இல்லாமல் அதிகரித்துக் கொண்டு இருந்ததை அறிந்த சில பயணிகள், அவர்களிடம் இருந்த கத்தியை போராடி பறித்து, தர்ம அடி கொடுத்து பேருந்து நிலையத்தின் மையப்பகுதியில் தரையில் அமர வைத்தனர்.

பின்னர், காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் அங்கு வந்த காவல்துறையினர், பேருந்து நிலையத்தில் கத்தியைக் காட்டி மிரட்டி கொண்டு இருந்த இந்த மர்ம நபர்கள் யார்..? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்..? இவர்கள் மீது குற்ற நடவடிக்கைகள் எதுவும் உள்ளதா..? என்று காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

Views: - 417

1

0