காத்து, இயற்கை, டைனோசர் குட்டிங்க…இதுக்கு மேல என்ன வேணும்..: இணையத்தை கலக்கும் பெரம்பலூர் டைனோசர் மீம்ஸ்…!!

24 October 2020, 5:16 pm
dino 4 - updatenews360
Quick Share

பெரம்பலூரில் டைனோசர் முட்டைகள் கிடைத்ததாக தகவல் வெளியானதை தொடர்ந்து, இதுதொடர்பான மீம்ஸ் இணையத்தை கலக்கி வருகின்றது.

பெரம்பலூர் அருகே உள்ள குன்னம் கிராமத்தில், வெங்கட்டான் குளத்தில் மராமத்து பணிகள் நடைபெற்று வந்தது.

அப்போது, வண்டல் மண் எடுத்தபோது கடல்வாழ் உயிரினங்கள் சிலவற்றின் தொல்லியல் படிமங்கள் கிடைத்துள்ளது.

மேலும், அப்பகுதியில் பெரிய உருண்டை வடிவிலான படிமங்களும் கிடைத்தன. அவை டைனோசர் முட்டைகள் என்ற வதந்திகளும் இணையத்தில் பரவியது.

ஆனால், அவை டைனோசர் முட்டைகள் இல்லை. பொதுவாக ஒரு சிறுபொருள் இருந்தால், அதனை சுற்றி தாதுப்பொருட்கள் சேர்ந்து உருண்டையாக காட்சியளிக்கும் அல்லது முட்டை வடிவில் காட்சியளிக்கும் என தொல்லியல் துறையினர் விளக்கம் அளித்தனர்.

இந்நிலையில், டைனோசர் முட்டை என பரவிய வதந்தி குறித்து பல்வேறு விதமான மீம்ஸ் வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. பெரம்பலூர், அரியலூர் பகுதிகளில் டைனோசர் வாழ்வது போன்ற நகைச்சுவையான மீம்ஸ் வேகமாக பரவி வருகிறது.

எது,எப்படியோ டைனோசர் குறித்து பரவிய வதந்திகள் மீம்ஸ் கிரியேட்டர்களின் கற்பனை திறனுக்கு தக்க தீனியாக அமைந்துவிட்டது.

Views: - 43

0

0