இயக்குநர் பாரதிராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் : தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் கோரிக்கை!!
17 September 2020, 11:37 amதிருப்பூர் : தயாரிப்பாளர்களை நோஞ்சான் என கூறி அவமதித்த பாரதிராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்றால் அவர் வீட்டின் முன்பு கூடி கண்டனம் தெரிவிப்போம் தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நமக்கு நாமே அணியினர் திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய திருப்பூர் செல்வராஜ், தயாரிப்பாளர்களை நோஞ்சான் என கூறி இயக்குநர் பாரதிராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார்.
தயாரிப்பாளர்களை தரக்குறைவாக பேசி உள்ளதாகவும் இதற்கு பாரதிராஜா உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும் எனவும் இல்லை என்றால் அவரது வீட்டின் முன்பு கூடி கண்டனத்தை தெரிவிப்போம் என தெரிவித்தனர்.
மேலும் சங்கம் ஒரு தலை பட்சமாக நடப்பதாகவும், தயாரிப்பாளர்களுக்கு நன்மைகள் கிடைக்க வில்லை எனவும் தெரிவித்தனர். ஒ.டி.டி யில் படங்கள் திரையிடுவது தயாரிப்பாளர்கள் முடிவு. எங்கு வருமானம் வருகிறதோ அதை தான் நாடி செல்வோம் என தயாரிப்பாளர் திருப்பூர் செல்வராஜ் கூறியுள்ளார்.