தமிழக நலனை நினைச்சு பாருங்க… இபிஎஸ் வழியை CM ஸ்டாலின் பின்பற்ற வேண்டும் ; இயக்குனர் கௌதமன் அறிவுறுத்தல்!

Author: Babu Lakshmanan
26 September 2023, 9:51 pm
Quick Share

அரியலூர் மாவட்டம் கூட்டணி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி வழியை முதலமைச்சர் ஸ்டாலின் பின்பற்ற வேண்டும் என இயக்குனர் கௌதமன் அறிவுறுத்தியுள்ளார்.

அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த அனிதா நீட் தேர்வு காரணமாக உயிரிழந்தார். இதனையடுத்து, அப்பொழுது, பல்வேறு அமைப்புகள் கட்சிகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றது. இதில், தமிழ் பேரரசு கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் கட்சியின் தலைவர் கௌதமன் கலந்து கொண்டார். இது குறித்து செந்துறை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கின் விசாரணைக்காக இன்று மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :- நீட் தேர்வை கண்டித்து திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, ஆயிரக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டது ஆனால், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் திமுகவினர் மீதுள்ள அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்பட்டு, எங்களைப் போன்றவர்கள் மீதான வழக்குகள் மட்டும் விசாரணையில் உள்ளது. இது கண்டிக்கத்தக்கது.

மேலும், பாஜகவுடன் அதிமுக எந்த காலத்திலும் கூட்டணி வைத்துக் கொள்ளாது எனக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதன் மூலம் அவர் ஒரு மிகப்பெரிய தலைவராக உருவெடுத்துள்ளார்.

அதேபோல், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினும் தமிழீழ இனப்படுகொலை மற்றும் காவிரியில் தண்ணீர் திறந்து விடாமல் தமிழக மக்களை பாதிக்கும் பாதிக்கச் செய்யும் காங்கிரஸ் உடன் எக்காலத்திலும் கூட்டணி இல்லை என அறிவிக்க வேண்டும், என வலியுறுத்தினார்.

Views: - 171

0

0