ஓரினச்சேர்க்கையின் போது தகராறால் நடந்த விபரீதம் : திருப்பூர் அருகே அதிர்ச்சி சம்பவம்!!

25 January 2021, 12:12 pm
homosex arrest - Updatenews360
Quick Share

திருப்பூர் : ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட தகராறில் வடமாநில இளைஞரை அடித்துக் கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் வீரபாண்டி பகுதிக்கு உட்பட்ட நொச்சிபாளையம் பிரிவில், அழுகிய நிலையில் ஒரு ஆண் கிடப்பதாக வீரபாண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வீரபாண்டி போலீசார், உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக, வீரபாண்டி போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அந்த ஆண் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும், விசாரணையில் இறந்தவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரவீந்திரதாஸ் என்பதும், திருப்பூர் வீரபாண்டி பிரிவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

மேலும் ரவீந்திரதாஸ் செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் கடைசியாக கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியை சேர்ந்த சுபாஷ் (வயது 20) என்பவர் பேசியது தெரியவந்தது. வீரபாண்டி பிரிவில் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சுபாஷை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், சுபாஷ் கடந்த ஒரு வருடங்களாக ரவீந்திரதாஸ் உடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்ததும், திருப்பூர்-பல்லடம் சாலை நொச்சிபாளையம் பிரிவு பகுதியில், ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு இருந்த பொழுது இருவருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக சுபாஷ், ரவீந்திரதாஸை அடித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து வீரபாண்டி போலீசார், சுபாஷ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Views: - 0

0

0