இதுமட்டும் நடக்கவே கூடாது…நடந்தால் சென்னைக்கு அழிவு நிச்சயம்: அதிர்ச்சி தகவல்…!!

24 November 2020, 1:50 pm
Quick Share

சென்னை: பேரிடர் காலங்களில் மத்திய அரசு இதுவரை நமக்கு போதிய நிதிஉதவி அல்லது மற்ற உதவிகள் செய்யாமல் இருந்தது, ஆனால் இனிவரும் காலங்களில் சென்னை சந்திக்கப்போகும் பேரிடர்களுக்கு மத்திய அரசின் நிறுவனங்களே காரணமாக இருக்கப்போகிறது என பூவுலகின நண்பர்கள் சுந்தர் ராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் பூவுலகின நண்பர்கள் சுந்தர் ராஜன் சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றினை அளித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் எண்ணூர்-பழவேற்காடு சதுப்புநிலத்தில் 2,000 ஏக்கர் நிலப்பரப்பு ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு பிறகு சுமார் 667 ஏக்கர் சதுப்பு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதில் அனேகமான நிறுவனங்கள் மத்திய அரசின் நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

poovazhagil - updatenews360

கொசஸ்தலை ஆற்றின் தாங்கும் திறன் 1,25,000 கனஅடி, இது கூவம் மற்றும் அடையாறு ஆற்றின் அளவை விட அதிகம் என தெரிகிறது. எனவே, அதில் ஆக்கிரமிப்புகளை ஏற்படுத்தினால் சென்னையின் வடக்கு-மேற்கு பகுதிகள் வெள்ளம் சூழல் பகுதிகளாக எப்போதும் இருக்கும். அதேபோல், பாரி முனையிலிருந்து திருவொற்றியூர் செல்லும் சாலை மிகுந்த கடலரிப்புக்கு உள்ளாகிவருகிறது.

இருப்பினும், எண்ணூர்-பழவேற்காடு பகுதியில் அந்த அளவிற்கு கடலரிப்பு ஏற்படவில்லை. இதற்கு காரணம் கடலுக்குள் இருக்கும் மணல் குன்றுகள். இந்த மணல் குன்றுகளை அழித்து கடலில் இருந்து 2,000 ஏக்கர் நிலப்பரப்பை ஆக்கிரமித்து பழவேற்காடு சதுப்புநிலத்தில் 2,000 ஏக்கர் நிலப்பரப்பை ஆக்கிரமித்து அதானி துறைமுகம் அமைந்தால் சென்னையை காப்பாற்றவே முடியாது என சுந்தர் ராஜன் தெரிவித்துள்ளார்.

எண்ணூர்-பழவேற்காடு கழிமுகம் சென்னையை பாதுகாக்கும் முக்கியமான சூழல் தொகுதிகள், அவற்றை ‘காலநிலை சரணாலயமாக’ அறிவித்து பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது மீனவ மக்களின் வாழ்வாதாரங்களை பாதுகாக்க மட்டுமல்லாமல் சென்னையை வெள்ளத்தில் இருந்தும், புயலில் இருந்தும் காப்பாற்ற நீர்வள ஆதாரங்களை பாதுகாக்க அவசியம் என்றும் இதனை உடனே செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Views: - 0

0

0