வேஷம் போடுபவர்கள் மக்களை ஏமாற்றலாம், கடவுளை ஏமாற்ற முடியாது : அமைச்சர் கடம்பூர் ராஜு பளார்!!

25 January 2021, 3:52 pm
Minister Kadamboor - Updatenews360
Quick Share

தூத்துக்குடி : எப்படி தேர்தல் பயணம் வந்தாலும் திமுக வெற்றி பெறபோவதில்லை என்றும், வேஷம் போடுபவர்கள் மக்களை ஏமாற்றலாம் ஆனால் கடவுளை ஏமாற்ற முடியாது என அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ தெரிவித்தள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் ரூ.5கோடியே 10 லட்ச மதீப்பில் மாணவர் விடுதி கட்டப்படவுள்ளது. இதற்கான தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் பச்சோந்தியை போல தேர்தல் வரவர நேரத்திற்கு நேரம் நிறந்தினை மாற்றிக்கொள்பவர்கள் திமுகவினர் என்றும், அதிமுக என்றைக்கும் ஒரே நிலைப்பாட்டில் இருக்கும் என்று கூறினார்.

பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவு இடத்திற்கு சென்ற போது அங்கு வழங்கிய விபூதியை கீழே தள்ளிவிட்டு மக்கள் புண்படும் படி நடந்து கொண்டவர் ஸ்டாலின், தேர்தல் வரும் போது திமுகவினர் தங்களது நிலைப்பாட்டினை மாற்றிக்கொள்வார்கள்.

இது திமுகவின் இரட்டை வேடம் என்றும், சூரம்சம்ஹாரம் நடைபெறும் திருச்செந்தூரில் அமைந்துள்ள செந்தில் ஆண்டவர் ஆயுதம் வேல் அதை எடுத்துள்ளனர். அதனை முருகன் பார்த்துக் கொள்வார், வேஷம் போடுபவர்கள் மக்களை ஏமாற்றலாம் ஆனால் கடவுளை ஏமாற்ற முடியாது என்றும், திமுக ஆட்சிகாலத்தில் பெண்களின் பாதுகாப்பு எந்த லட்சணத்தில் இருந்தது என்று நாடறிந்த உண்மை என்றும், திமுக ஆட்சியில் மதுரையில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மாநகராட்சி உறுப்பினராக இருந்த லீலாவதி திமுக ரவுடிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

தற்பொழுது எதிர்கட்சியாக இருக்கும் திமுக பெரம்பலூரில் மாமூல் தரவில்லை என்பதற்காக ப்யூட்டி பார்லர் உரிமையாளரை அடித்து உதைத்து பின்னர் சமாதனப்படுத்தி வழக்கினை வாபஸ் பெற வைத்தனர். இதற்கு கனிமொழி எம்.பி.விளக்கம் கொடுத்தால் அவருடைய கேள்விகளுக்கு பதில் கூறலாம் என்று கூறினார்.

நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு தேர்தலிலின் போது அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி இருவரும் தான் வேட்பாளர்களை அறிவித்தனர். கட்சியில் எவ்வித பிரச்சினையும் ஏற்படவில்லை.

அதிமுக வெற்றி பெற்று அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் விரும்புகின்றனர்.சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக தலைமை அறிவிக்கும் வேட்பாளர்களுக்கு அதிமுகவினர் கடந்த காலத்தினை விட அதிகமாக எழுச்சியுடன் அதிமுக தொண்டர்கள் தேர்தல் பணியாற்றுவார்கள் என்றும் கூறினார்.

எப்படி தேர்தல் பயணம் வந்தாலும் திமுக வெற்றி பெறபோவதில்லை என்றும், 2016 தேர்தல் முடிவு வருவதற்கு முன்பு மாதிரி மந்திரி சபை அமைத்து வள்ளுவர் கோட்டத்தில் ஒத்திகை பார்த்தவர்கள் திமுகவினர் என்றும்,ஆனால் தொடர்ச்சியாக அதிமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

அதை போன்று தொடர்ச்சியாக 3வது முறையாக வெற்றி பெற்று அதிமுக ஆட்சியை பிடிக்கும் என்ற வகையில் தான் முதல்வர் சுற்றுப்பயணம் அமைந்துள்ளது. தேர்தல் முடிவும் அப்படித்தான் வரும்,வரும் தேர்தல் ஆட்சி மாற்றித்திற்கான தேர்தல் கிடையாது, அதிமுக ஆட்சி தொடர்வதற்கான தேர்தல். நாங்கள் மட்டுமல்ல மக்களும் அந்த மன நிலையில் தான் உள்ளனர்.

யாராக இருந்தாலும் உடல் நிலை பாதிக்கப்பட்டாலும், உடல் நலம் பெறவேண்டும் என்று அனைவரும் கட்சி வேறுபாடி இன்றி கூறுவது வழக்கம். அந்த வகையில் தான் சசிகலா உடல் நலம் தொடர்பாக அமைச்சர்கள் கருத்து தெரிவித்து இருக்கலாம் என்றும், மத்தியரசு வழிகாட்டுதல் தெரிவித்தவுடன், அமைச்சர்களும் கோவிட் தடுப்பு ஊசி போடுவதற்கு தயராக இருக்கிறோம் என்றார்.

Views: - 0

0

0