அருவருக்கத்தக்க ஆபாச வீடியோ.. இன்ஸடா CRINGE மன்னன் இன்பா அதிரடி கைது!!!
திருச்சிராப்பள்ளி மாவட்டம், சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் விஜய் (26), என்பவர், இணைய மற்றும் சமூக வலைதள குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்த போது நேற்று (04.12.23)-ஆம் தேதி சமுகவலைதளமான YouTube மற்றும் Instagram -வை பார்த்துக் கொண்டு இருந்த போது inba’s track என்ற பெயரில் @inba’s track என்ற id யை பயன்படுத்தி சமூக வலைதளங்களில் ஆபாசத்தை தூண்டும் வகையில் பேசுவது போல சமூக வலைதளங்களில் ஆங்கிலத்தில் TEXT வருவது போல mono-acting மூலம் வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளார்.
இவரின் mono-acting வீடியோக்களை பார்க்கும்போது, வீடியோக்கள் அனைத்தும் அருவறுக்கத்தக்க வகையிலும், ஆபாசமான வகையிலும் உள்ளது. இவ்வீடியோக்களை பார்க்கும் மாணவ, மாணவியர்கள் மற்றும் கல்லூரியில் படிக்கும் இளைஞர்களிடம் மீண்டும் வீடியோக்களை பார்க்க தூண்டி, பாலுணர்வுகளை தூண்டும் வகையிலும், கணவன் மனைவி உறவு முறை பற்றி ஆபாசமாகவும், மேலும் முதலிரவு பற்றிய வீடியோக்களை அனுப்பியும், பெண்களை பற்றி தவறாக சித்தரித்தும் mono-acting மூலம் பல வீடியோக்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து Instagram -ல் 82,000க்கும் மேற்பட்ட Followers மற்றும் YouTube – 1,93,000 subscribers பெற்று உள்ளதால், இவரது வீடியோக்களைப் பார்க்கக் கூடிய குழந்தைகள், பெண்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் இடையே பாலியல் தொடர்பான எண்ணங்கள் ஏற்பட்டு பாலியல் குற்றச் செயலில் ஈடுபட வாய்ப்புள்ளது என்பதாலும், இதனால் இளைஞர் சமூதாயத்திற்கு சீர்கேடு ஏற்படும் வகையிலும், மேலும் பெண்களின் நாகரீகத்தை இழிவுப்படுத்தும் வகையில் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார்.
திருச்சி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் குற்ற எண் 32/23. U/s 292(a), 294(b), 509 IPC & 67. 67-А, 67-B of IT Act. & 4 r/w 6 of Indecent Representation of Women (Prohibition Act.) மேற்படி சமூக வலைதளத்தை பயன்படுத்திய நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.